Friday, March 23, 2018

Samsung Galaxy S9 இடம் வேகத்தில் தோற்ற iPhone X

ஸ்மார்ட் போன் உலகின் ஜாம்பவான்களாக திகழும் Apple மற்றும் Samsung இடையிலான போட்டி நாம் அனைவரும் அறிந்ததே.  கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனமானது iPhone X எனும் மாடலை அறிமுகம் செய்தனர். அதன்பின் Samsung பாவனையாளர்கள் அன்று முதல் சாம்சுங் இன் படைப்பான S9 ஐ எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். Samsung நிறுவனம் கடந்த மாதம் S9 மாடலை வெளியிட்டனர்.





ஸ்னாப்ட்ராகன் 845 SoC மூலம் இயங்கும் கேலக்ஸி S9 +, நிச்சயமாக எந்த ஆண்ட்ராய்டு தொலைபேசியை விட வேகமானது என்றாலும் ஆப்பிள், ஐபோன் எக்ஸ் ஆகியவற்றிலிருந்து A11 பயோனிக்-இயங்கும் ஐபோன் சிறப்பானதாக இல்லை. இருப்பினும், வேக சோதனை வீடியோவில் ஐபோன் எக்ஸ் செயல்திறன் அடிப்படையில் முற்றிலும் கேலக்ஸி S9 + இடம் தோற்றது. இருந்தாலும் இரண்டு கைபேசிகளும் வெவ்வேறு வன்பொருள் மற்றும் மென்பொருள் கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்பதையும், அவை செயல்முறைகளை கையாளுவதும் வித்தியாசமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


வேக சோதனைகளில் முதற்படியாக "Launching Apps" சோதனையில் iPhone X ஆனது வெற்றி பெற்றது. இது S9 ஐ விட அதிக Graphics கொண்ட செயலிகளை திறப்பதற்கு குறைவான நேரமே எடுத்தது. அதன் பின்னர் "Re Launching" சோதனையில் S9 இன் வேகத்திற்கு iPhone X இனால் ஈடு கொடுக்க முடியவில்லை.

மேலும் பல்வேறு பட்ட சோதனைகளை கீழ் உள்ள வீடியோ மூலம் பார்க்கவும்.


Saturday, March 17, 2018

WhatsApp மெசேஜை 1 மணி நேரம் கழித்து Delete செய்யும் வசதி!

வாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை  டெலிட் செய்யும் வசதி  1 மணி நேர கால அவகாசமாக நீட்டிக்கப்படவுள்ளது.

ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி, நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது.  யூசர்களை கவரும் வகையில், இந்த செயலில் இடம்பெறும் புதிய புதிய அப்டேட்டுகள்  நல்ல வரவேற்பை பெற்று  வருகின்றன.
அந்த வகையில்,  சமீபத்தில் வாட்ஸ் அப்பில், தவறாக அனுப்படும் மெசேஜ்களை  இருவருக்கும் டெலிட் செய்து வசதி (Delete for everyone)  புழகத்திற்கு வந்தது. யூசர்களை  இந்த அப்டேட் வெகு அளவில் கவர்ந்தது. இருப்பினும்,  மெசேஜ் அனுப்பிய  6 நிமிடங்களுக்கு மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில்.  6 நிமிடம் கால அவகாசம் 1 மணி நேரமாக விரைவில் நீட்டிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.



இந்த அப்டேட் வெர்ஷன் தற்போது ஆன்ட்ராய்ட் பீட்டார் வெர்ஷன்  2.18.69 ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில், இந்த அப்டேட் அனைத்து வாட்ஸ் அப் செயலியிலும் அப்டேட் செய்யப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல், கூடிய விரைவில் வாட்ஸ் அப்பில், வாய்ஸ் சாட் வசதியும் எளிமையாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Friday, March 2, 2018

விற்பனைக்கு வரும் Samsung Galaxy S9 மற்றும் S9+

சாம்சங் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனின் வெளியீடு சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்சமயம் வெளிவந்துள்ளது, அதன்படி சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றிய விவரங்களை தற்சமயம் அறிவித்துள்ளார்.


சாம்சங் நிறுவனத்தின் அசத்தலான கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த  பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2018)-நிகழ்ச்சியில் அறிமுகம் செயப்பட்டது. சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மாடல் இம்மாதம் விற்பனைக்கு வருகின்றது.

DISPLAY:

சாம்சங் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் 5.8 டிஸ்பிளே அல்லது 6.2-இன்ச் சூப்பர் அமோல்ட் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



SENSORS :

இந்த ஸ்மார்ட்போனில் சென்சார்கள், இயர்போன் ஜாக், செல்பீ கேமரா போன்றவை இடம்பெறுவதால் சிறய அளவு பெசல்கள் வைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CAMERA :

S9 மற்றும் S9+ இல் பிரதான கேமரா ஆனது ஒளியின் அளவை உணரும் தன்மை உடையதாகவும் அதற்கேற்ப தானாகவே Aperture ஐ மாற்றும் தன்மையும் கொண்டுள்ளது. இதன் Aperture Value ஆனது f/2.4 இருந்து f/1.5 மாறுபடக்கூடியது. புகைப்பட ரசிகர்களுக்கு S9 சிறந்த விருந்தாக அமையும்.



CHIPSET :

சாம்சங் கேலக்ஸி எஸ்9 எக்சைனோஸ் 981 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு தாமதமாகாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

STORAGE :

இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 4GB/6GB ரேம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் 128GB உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் மூலம் 400GB வரை அதிகரிக்கலாம்.


Tags : Samsung Galaxy S9 in Tamil , Samsung Galaxy S9 Features in Tamil , Samsung Tamil , S9 and S9+ Tamil , Tamil Andoid News. Samsung Android.

Sunday, February 18, 2018

ஐபோனை செயலிழக்கச் செய்யும் ‘தெலுங்கு எழுத்து’ !!

தெலுங்கு மொழியைச் சேர்ந்த ஒரே ஒரு எழுத்து உலகம் முழுவதும் உள்ள ஐபோன்களை செயலிழக்கச் செய்து வருகிறது!


படத்தில் இருக்கும் ஒற்றை எழுத்து தெலுங்கு மொழியில் உள்ளது. இந்த எழுத்தை ஐபோனுக்கு மெசேஜாக அனுப்பினால் போதும் உடனே அந்த ஐபோன் செயலிழக்கும். சாதாரண மெசெஞர் அல்லது வாட்ஸ் அப், ஹைக் போன்ற இன்ஸ்டண்ட் மெசெஞ்சர்களில் இந்த தெலுங்கு எழுத்தை ஒருவருக்கு அனுப்பினால் அந்த மெசேஜைப் பெறுபவர் பிறகு அந்த அப்ளிகேஷனை திறக்கவே முடியாது!

உதாரணமாக வாட்ஸ் அப் மூலம் இந்த எழுத்தை ஒருவர் உங்களுக்கு அனுப்பினால், நீங்கள் அந்த அப்ளிகேஷனை திருப்ப பயன்படுத்தவே முடியாது. இந்த விபரீதம் ஐபோனில் எப்படி பரவ ஆரம்பித்தது என்று தெரியாமல் ஆப்பிள் நிறுவனம் விழிபிதுங்கியுள்ளது.



ஐபோன் X ஆக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தன் வேலையைக் காட்டும் இந்தத் தெலுங்கு எழுத்து ஐபோன் பிரியர்களை பீதி அடைய வைத்துள்ளது.




இரண்டு வழிகள்

இந்நிலையில் இரண்டு வழிகளில் இந்த தெலுங்கு எழுத்திலிருந்து தப்பிக்கலாம். முதல் வழி குறிப்பிட்ட தெலுங்கு எழுத்து உள்ள மெசேஜ் வந்தவுடன் அதைத் திறந்து பார்த்துவிட வேண்டும். பின், பேக் பட்டனை அழுத்தி பின்னால் வந்து அந்த மெசேஜ் அனுப்பியவரின் Chat முழுவதையும் டெலிட் செய்துவிட வேண்டும். மீண்டும் மீண்டும் அந்த தெலுங்கு எழுத்து வந்து கொண்டே இருந்தால் இதையே திரும்பத் திரும்ப செய்ய வேண்டியதுதான். இது அனைத்து மெசெஞ்சர்களிலும் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.

மற்றொரு வழி முன்கூட்டியே iOS 11.3 beta என்ற இலவச இயங்குதளத்தை உங்கள் ஐபோனில் நிறுவிவிட வேண்டும்.

Pls Share this News !!

Tags : Iphone Crash , Telugu Letter Crash Iphon , Telugu Letter , Telugu Letter Iphone Problem , How to Fix Telugu Letter Iphone Problem 

Friday, November 10, 2017

ஆப்பிள் ஐபோன் X சிறப்பம்சங்கள்.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற்ற முதல் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டது. 




ஆப்பிள் ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பிரத்தியேக ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களை கவரும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில், புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஐபோன் X அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன் டென் என அழைக்கப்படும் ஐபோன் X கிளாஸ், ஸ்டெயின்லெஸ் மற்றும் அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஐபோன் X சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் OLED பேனல் கொண்டுள்ளது.





வடிவமைப்பு:


முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போனில் இதுவரை ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாத உறுதி தன்மை கொண்ட கிளாஸ், சர்ஜிக்கல்-கிரேடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறங்களில் கிளாஸ் வழங்கப்பட்டு்ள நிலையில் புதிய ஐபோன் X வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.




டிஸ்ப்ளே:


ஆப்பிள் வரலாற்றில் முதல் முறையாக ஐபோன் சாதனத்தில் OLED பயன்படுத்தப்பட்டுள்ளது. 5.8 இன்ச் அளவு கொண்ட ஸ்கிரீன் மற்றும் OLED வாடிக்கையாளர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்கும். சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே 2436x1125 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளதோடு எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே மற்றும் நிறங்களை அதிக பிரகாசமாக பிரதிபலிக்கிறது. ஸ்கிரீனில் டேப் செய்து, போனினை வேக் செய்ய முடியும். இக்குசன் ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் மற்றும் 3D டச் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 

சிப்செட்:

ஐபோன் X ஸ்மார்ட்போன் புதிய A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்குகிறது. இதுவரை வெளியான ஸ்மார்ட்போன் பிராசஸர்களில் அதிக செயல்திறன் கொண்ட பிராசஸர் இது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பிராசஸர் ஆப்பிள் GPU உடன் இணைந்து அதிக தரமுள்ள கேமிங் அனுபவத்தை சீராக வழங்க வழி செய்யும். A10 சிப்செட்டை விட புதிய GPU 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கேமரா:

புதிய ஐபோன் X ஸ்மார்ச்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா, வைடு ஆங்கிள் கேமராவில் f/1.8 அப்ரேச்சர், டெலிபோட்டோ லென்ஸ் f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. கேமராவுடன் குவாட்-எல்இடி ட்ரூ டோன் பிளாஷ் புகைப்படங்களை அதிக தரமுள்ளதாக வழங்கும். டூயல் கேமராக்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளதோடு போர்டிரெயிட் மோட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் புகைப்படங்களில் ஃபில்ட்டர் சேர்க்காமல் லைட் மாற்ற வழி செய்யும்.

கேமராக்களுடன் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அம்சம் மற்றும் மிக நேர்த்தியான மோஷன் டிராக்கிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ஐபோன் X இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிக்களை எடுக்க ட்ரூடெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு போர்டிரெயிட் மோட் லைட்டிங்கில் செல்ஃபிக்களை எடுக்க முடியும்.


ஃபேஸ் ஐடி:

அதிகம் எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டன் வழங்கப்படவில்லை. ஹோம் ஸ்கிரீன் செல்ல ஸ்மார்ட்போன் திரையில் கீழ் இருந்து மேல்பக்கமாக ஸ்வைப் செய்தால் ஹோம் ஸ்கிரீன் திறக்கும். சிரியுடன் பேச பக்கவாட்டில் உள்ள பட்டனை கிளிக் செய்ய வேண்டும். போனினை அன்லாக் செய்ய போனினை பார்த்தாலே போதுமானது. புதிய ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் கொண்டு ஐபோன் உங்களை அறிந்து கொண்டு அன்லாக் செய்யும்.

ஆப்பிளின் A11 பயோனிக் நியூரல் இன்ஜின் மூலம் இந்த அம்சம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரூ டெப்த் கேமரா அமைப்பு IR கேமரா மூலம் IR புகைப்படங்களை எடுக்கும். குறிப்பாக உங்களது முகத்தில் எவ்வாறு சிகை அலங்காரங்களை மாற்றிக் கொண்டாலும், ஐபோன் உங்களை கண்டறிந்து போனினை அன்லாக் செய்யும். புதிய ஃபேஸ் ஐடி ஆப்பிள் பே மற்றும் இதர செயலிகளிலும் வேலை செய்யும்.  


அனிமோஜி:

ஐபோன் X ஸ்மார்ட்போனில் உள்ள புதிய எமோஜி அம்சம் அனிமோஜி என அழைக்கப்படுகிறது, இதனை உங்களது முக பாவணைகளை அடிப்படையாக கொண்டு வேலை செய்யும். ட்ரூடெப்த் கேமரா மூலம் முக பாவணைகளை அறிந்துகொண்டு இந்த அம்சம் வேலை செய்கிறது. வாடிக்கையாளர்கள் வழங்கும் முக பாவணைகளை அப்படியே அனிமோஜிக்களாக மாற்றுவதால், இவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

பேட்டரி:

ஐபோன் X ஸ்மார்ட்போனில் முந்தைய ஐபோன் 7-இல் வழங்கப்பட்டதை விட அதிக பேட்டரி வழங்கப்பட்டிருப்பதால், முந்தைய மாடலை விட கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இத்துடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் போன்றே வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏர்பவர் என்ற சாதனத்தை கொண்டு ஒரே சமயத்தில் மூன்று ஆப்பிள் சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய முடியும். 

Sunday, November 13, 2016

கணினியில் உள்ள இணைய இணைப்பை Wi-Fi மூலம் Share பண்னுவது எப்படி?

உங்கள் கணினியில் இருக்கும் எந்தவொரு இணைய இணைப்பையும் அதாவது  Wi-fi, LAN, Cable Modem, Dial-up இப்படி எதுவாக இருந்தாலும், இந்த மென்பொருளைக்கொண்டு ,உங்கள் Net Connection ஐ இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Wi-fi மூலம் மற்றவா்களுடன்  பகிர்ந்து கொள்ள முடியும்.




Network Name (SSID) என்பதற்கு விரும்பிய பெயரையும், Password என்பதற்கு விரும்பிய Password இணையும், Shared Connection என்பதற்கு உங்கள் கணியில், நீங்கள் பாவிக்கும் இணைய இணைப்பையும் தொிவு செய்து விட்டு, Start Virtual Router Plus என்ற பட்டனை க்ளிக் செய்தால் சரி.உங்கள் இணை இணைப்பை இனி Wi-Fi மூலம் எந்தவொறு சாதனத்தின் மூலமும் உங்கள் Password இனை கொண்டு  பெற்றுக்கொள்ள முடியும்.


Thursday, November 10, 2016

Web Browser இல் விளம்பர தொல்லையா?

அன்றாடம் இணையத்தில் உலாவும் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில வேலைகளால் எமது இணைய உலாவியில் அடிக்கடி விளம்பரங்களும் வளமைக்கு மாறான தேடல் பொறியும் இருப்பதை நாம் காண முடியும்.

இவற்றை அகற்றுவதற்கு பலரும் பல முறைகளில் முயற்சி செய்து இருப்பீர்கள். அப்போது தான் நாம் நமது கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருட்களை அகற்றுவது பற்றியும் இணைய உலாவியில் உள்ள addon களை அகற்றுவது பற்றியும் சிந்திப்போம் . இருந்தாலும் பெரும்பாலான முயற்சிகள் இதற்க்கு பயன் அளிப்பதாக தெரியவில்லை. சில முறை சாத்தியப்பட்டாலும் மறுகணமே மீண்டும் இந்த தொல்லை ஆரம்பிக்கும். 


Adware Removal Tool எனும் மென்பொருள் இதற்கு ஒரு அருமையான மருந்து. இதன் மூலம் நாம் அறியாத பல விளம்பர சேவைகளும் , ஆங்காங்கே மிளிரும் பல பொய்யான Addon களும் அகற்றப்படுகின்றன.நீங்கள் இதனை உங்கள கணினியில் நிறுவ வேண்டிய அவசியமும் இல்லை , நேரடியாகவே பயன்படுத்த முடியும். இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.


பிடித்து இருந்தால் Share செய்யவும்.

Tuesday, October 4, 2016

64 Bit - 32 Bit என்றால் என்ன? ஒரு விரிவான பார்வை.

கணினியின் மூளையாக தொழிற்படும் ஒரு வன்பொருள் சாதனமே Central Processing Unit என அறியப்படும் CPU ஆகும். நாம் உள்ளிடும் தரவுகளை தகவல்களாக மாற்றும் பிரதான தொழிற்பாடு இந்த CPU எனும் சாதனத்தாலே இடம்பெறுகின்றது என்றாலும் இதற்கு RAM எனும் நினைவகத்தின் பங்கும் உண்டு.

Processor பிரதானமாக இரண்டு வகைப் படுகின்றது. அதில் ஒன்று 32 Bit எனவும் மற்றையது 64 Bit எனவும் இனங்காணப் படுகின்றது.


Bit என்பது Binary Digit என்பதன் சுருக்கமாகும் இதன் மூலமாகவே கணினியில் தரவுகள் சேமிக்கப்படுகின்றன. ஒரு பிட் என்பது 0 அல்லது 1 எனும் பெருமானங்களாக எடுக்கலாம். 1 மற்றும் 0 களால் ஆன எழுமாறான ஒரு சேர்மானமே (100100100111) Binary code எனப்படுகிறது.

Bit எனும் இந்த பெறுமானத்தை கொண்டே CPU கணித்தல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றது. 32 Bit வகையில் அமைந்த Processor மூலம் பூச்சியத்தில் இருந்து4,294,967,295 வரையான சேர்மானங்களை உருவாக்கலாம், அதே போல் 64 Bit வகையில் அமைந்த Processor மூலம் பூச்சியத்தில் இருந்து 18,446,744,073,709,551,615 வரையிலான வெவ்வேறு சேர்மானங்களை உருவாக்க முடியும். இதன் மூலம் 64 Bit வகையில் அமைந்த Processor கள் மூலம் அதிக அளவிலான தரவுகளை கையாள முடியும் என்பது தெளிவாகின்றது.

அத்துடன் கணினியில் Data Bus எனும் ஒரு விடயம் அமைந்துள்ளது இதன் தொழிற்பாடு RAM நினைவகத்தை Processor உட்பட கணினியின் இன்னும் பல பாகங்களுடன் இணைப்பதாகும். எனவே இங்கு 32 Bit ஐ அடிப்படையாகக் கொண்ட கணினியில் Data Bus இன் அளவு 32 Bit ஆக இருக்கும் அதேவேளை 64 Bit ஐ அடிப்படையாகக் கொண்ட கணினியில் Data Bus இன் அளவு அதன் இரு மடங்காக இருக்கும். எனவே 64 Bit கணினிகளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் கையாளப்படும் தரவுகளின் அளவு அதிகமாக இருப்பதால் அவைகள் 32 Bit கணினியிலும் பார்க்க வேகமாக இயங்கும்.

64 Bit Processor இன் கட்டமைப்பானது 32 Bit Processor இலும் பார்க்க பல மடங்கு மேம்பட்டதாக அமைந்திருக்கும் இதனால் 32 Bit Processor ஐ விட 64 Bit Processor அதிக செயற்திறன் வாய்ந்ததாக இருக்கும் எனினும் 64 Bit Processor களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய மென்பொருள்கள் நிறுவப்படும் போதே இதன் பூரண பயனை பெற்றுக்கொள்ள முடியும்.

தற்பொழுது உருவாக்கப்படக்கூடிய இயங்குதளங்கள் உட்பட ஏராளமான மென்பொருள்கள் 64 Bit இற்கு ஆதரவு அளிக்கக்கூடிய வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. 

இதன் காரணமாகவே இன்று இயங்குதளங்கள் உட்பட இன்னும் ஏராளமான மென்பொருள்களின் பதிப்புக்கள் 32 Bit, 64 Bit என வெவ்வேறாக கிடைக்கின்றன. பொதுவாக 64 Bit இயங்குதளம் நிறுவப்பட்ட கணனியில் 32 Bit பதிப்பை கொண்ட மென்பொருள்களை நிறுவ முடியும் என்றாலும் 32 Bit கணினியில் 64 Bit பதிப்பை கொண்ட மென்பொருள்களை நிறுவ முடியாது.

எனவே மென்பொருள்களை தரவிறக்கும் போது உங்கள் கணினி 64 Bit இற்கு ஆதரவு அளிக்கும் எனின் 64 Bit பதிப்பில் அமைந்த மென்பொருள்களை தரவிறக்கி பயன்படுத்துங்கள் இதன் மூலம் உச்ச பயனை பெற முடியும்.

அத்துடன் 32 Bit வகையில் அமைந்த கணினிகள் அதிகப்படியாக 4 GB RAM நினைவகத்தையே ஆதரவு அளிக்கும். என்றாலும் 64 Bit வகையில் அமைந்த கணினிகள் அவ்வாறில்லை 4 GB ஐ விட அதிக நினைவகத்தை கொண்ட RAM இற்கும் ஆதரவு அளிக்கும்.