வாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை டெலிட் செய்யும் வசதி 1 மணி நேர கால அவகாசமாக நீட்டிக்கப்படவுள்ளது.
ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி, நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. யூசர்களை கவரும் வகையில், இந்த செயலில் இடம்பெறும் புதிய புதிய அப்டேட்டுகள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் வாட்ஸ் அப்பில், தவறாக அனுப்படும் மெசேஜ்களை இருவருக்கும் டெலிட் செய்து வசதி (Delete for everyone) புழகத்திற்கு வந்தது. யூசர்களை இந்த அப்டேட் வெகு அளவில் கவர்ந்தது. இருப்பினும், மெசேஜ் அனுப்பிய 6 நிமிடங்களுக்கு மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில். 6 நிமிடம் கால அவகாசம் 1 மணி நேரமாக விரைவில் நீட்டிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த அப்டேட் வெர்ஷன் தற்போது ஆன்ட்ராய்ட் பீட்டார் வெர்ஷன் 2.18.69 ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில், இந்த அப்டேட் அனைத்து வாட்ஸ் அப் செயலியிலும் அப்டேட் செய்யப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், கூடிய விரைவில் வாட்ஸ் அப்பில், வாய்ஸ் சாட் வசதியும் எளிமையாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment