Wednesday, September 9, 2015

Webcamera-வை CCTV Camera வாக மாற்ற‍லாம்

  
வெப்கேமராவை சிசிடிவி கேமராவாக எளிதில் மாற்ற‍லாம் , முற்றிலும் இலவசமாக . . ..
சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற் கு ஆயிரக்கணக்கில் செலவா கும் என நினைத்து வைக்காம லே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங் கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள் ள cameraவை எளிதில் cctv கேமராவாக
எளிதல் மாற்றிவிட லாம்.
இதை செய்வதற்கு yawcam என்ற மென்பொருளை நாம் பயன்படுத்தி க் கொள்ளலாம். இதில் மகிழ்ச்சி யான செய்தி என்னவெ னில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் தான். எனவே எந்த செலவும் நமக்கு இல்லை.
இதில் பல்வேறு வசதிகள் உள்ளது. உதாரணமாக motion detection என்ற வசதிஉள்ளது. எதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவு ஏற்ப ட்டால் உடனே நமக்கு email மூலம் alert செய்யும். நாம் கேமரா வை கண்காணிக்காது இருக்கும்போது வீட்டில் யாராவது புகுந் தால் அதை நமக்குதெரியப்படுத்த இ ந்த வசதி உதவியாக இருக்கும்.
இன்டர்நெட்மூலம் எங்கிருந்துவே ண்டுமானாலும் உங்கள்வீட்டை அல் லது கடையை கண்காணித்துகொள் ளலாம். இதில் கூடுதல் ஒரு வதி என்னவெனில் சிசிடிவி கேமராவை க்கப்பட்டு கண்காணிக்கப்படுின்றது என யாருக்கும்தெரியாது. எதோ கம்யுட்டர் என்றுதான் அனை வரும் நினைத்துக் கொள்ளவார்கள். இதனால் வீட்டில் கடையில் நடக்கும் உண்மை நிலையை யாருக்கும் தெரியாமல் நாம் கண் காணிக்கலாம்.
இந்த மென்பொருளில் பின் வரும் வசதிகள் இடம் பெற்று ள்ளது.
Yawcam features:
.: Video streaming
.: Image snapshots
.: Built-in webserver
.: Motion detection
.: Ftp-upload
.: Text and image overlays
.: Password protection
.: Online announcements for communities
.: Scheduler for online time
.: Time lapse movies
.: Run as a Windows service
.: Multi languages
பின் வரும் இணையத்திற்கு சென் று இந்த மென்பொருளை இலவச மாக Download செய்து கொள்ள லா்ம:

Wednesday, February 18, 2015

கணனியில் தோன்றும் Beep ஒலி

கணனியில் ஒலிக்கும் பீப் ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.


1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்
4 முறை பீப் சத்தம்:
டைமரில் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.
5 முறை பீப் சத்தம்:
ப்ராசசரில் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.
6 முறை பீப் சத்தம்:
கீ போர்டு, கீ போர்டு கண்ட்ரோலில் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.
7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.
8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.
11 முறை பீப் சத்தம்:
கேச் மெம்மரி சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.
1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
மெமரி தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணனி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.
தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
கணனி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.
1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.
1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்
3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.
இப்போது கணனியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே உங்கள் கணனியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

Monday, October 6, 2014

USB இன்டர்நெட் Dongle ஐ WiFi Dongle ஆக மாற்றி இன்டர்நெட்டை பகிர்வது எப்படி ?

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.

இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என எல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்
Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
1. முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2. Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்

அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும். Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.
3. இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டியது அவசியம்.

Monday, April 22, 2013

கம்ப்யூட்டர் சாவியாக USB



நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர்(Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம். http://www.montpellier-informatique.com/predator/en/index.php?n=Main.Telechargement என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.
இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும். 
கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்.

Tuesday, March 5, 2013

இணையத்தில் பணம் சம்பாதிக்க சுலபமான வழி


இன்று இணையத்தளங்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் முறைகள் பல இருக்கின்றன சொல்லப்போனால் கூகிள் நிறுவனத்தின் Adsence ஐ கூறலாம்.அனால் இணையத்தில் இவ்வாறு இலட்சக்கணக்கான இணயத்தளங்கள் உள்ளன அவற்றில் பல போலியானவை. Visitors2cash  என்ற தளம் இலகுவாக பணம் சம்பாதிக்கும் முறையை காட்டி இருக்கின்றது.


முதலில் நீங்கள் இத்தளத்தில் Signup செய்ய வேண்டும்.  நீங்கள் இத்தளத்தில் உறுப்பினர் ஆன அடுத்த நொடியே உங்களுக்கு 2$ கிடைத்துவிடும் அதன் பின் உங்களுக்கு Referral Code கிடைக்கும் பின்னர் அதை நீங்க facebook இல் Share  செய்வதன் மூலம் உங்கள் நண்பர்களிடமும் அதனை தெரியப்படுத்தலாம். உமது நண்பர்கள் செய்யும் ஒவ்வொரு கிளிக் இற்கும் உங்களுக்கு 0.5$ கிடைக்கும்.

இவ்வாறு செய்து உங்களது கணக்கில் 30$ ஆனவுடன் அப்பணத்தை நீங்கள் உமது வீட்டிற்கே எடுக்கலாம் . கீழே உள்ள ஐ கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அந்த தளத்திற்கு செல்லலாம்.முயன்று பாருங்கள்....

http://visitors2cash.com/ref.php?refId=56715

Wednesday, February 27, 2013

உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம்!

இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.' என்று வரும் , அதில் உறுப்பினராக வேண்டுமெனில், இமெயில் முகவரி அளித்து , இன்னப்பிற தகவல்களை அளித்து , அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். 




இதற்குள் நாம் தேடிய விசயமே மறந்துவிடும். சில சமயம் அறியாத இணையத்தளங்களில் நமது மெயில் முகவரியை அளித்தால், அது ஸ்பாம்மர்களின் கையில் சிக்கி, நாம் வெற்றிலை பாக்கு வைத்து ஸ்பாம்மர்களை அழைத்தது போல் ஆகிவிடும். இது போன்ற சிக்கல்களை தீர்க்க இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் நீங்கள் http://www.bugmenot.com/ இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் உறுப்பினர் ஆகா வேண்டிய இணையத்தள முகவரியை அளித்தால், அவர்கள் இலவச ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு அளிப்பார்கள் . உதாரணமாக நாம்www.tamilwire.com முகவரிக்கு சென்று புதிய படங்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் அதற்க்குUsername , Password அளித்தால், தான் படங்களை டவுன்லோட் பண்ண முடியும் ஆனால் நாம் நான் கூறிய இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் படங்களை டவுன்லோட் பண்ண இருக்கும் www.tamilwire.com என்ற இத இணையத்தளத்தின் முகவரியை கொடுத்தால் அவர்கள் நமக்கு இலவச Username மற்றும் Password கிடைக்கும் அதை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் . இதனால் அவசத்தேவையின் போது இதனை பயன்படுத்தி நாம் ஆபத்து இல்லாமல் இணையத்தளங்களை பயன்படுத்தலாம் நேரத்தையும்

மிச்சப்படுத்தலாம்.



Tuesday, February 5, 2013

மாறும் Internet முகவரி அமைப்பு


இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது. இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் 
இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும்.

இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் Internet Society-யினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால் இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதன் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது.  நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.

IPv6 அமைப்பில் 340 undecillion முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில் 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் network நிறுவனங்கள் கையாளும்.

Thursday, January 17, 2013

தேவையற்ற மின்னஞ்சல்களை எப்படி Block செய்வது?


மின்னஞ்சலை திறக்கும் போது சிலருக்கு பெரும் தலைவலியாக இருப்பது தேவை எல்லாத மின்னஞ்சல்கள் தான். நாம் இணையத்தில் உலாவுகையில் ஏதாவது சில தளங்களில் எமது மின்னஞ்சலை பதிவு செய்து இருப்போம் ஆயின் அத்தளங்களில் இருந்து வேண்டாத மின்னஞ்சல்கள் எமது இன்பாக்ஸ் இல் வந்து குவிந்து பெரும் தொல்லையை ஏற்படுத்தும் அதுக்கு தான் நான் ஒரு மாற்று வழி சொல்கிறேன்

  • For Gmail 

1. Login to your account
2. At the top-right corner, click on Settings
3. Under Settings, click on Filters
4. You’ll now see an option “Create a new filter“, click on it
5. Now in the From field enter the email address from which you do not want to receive the emails 
உதாரணமாக tamil10000@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் tamil10000@gmail.com என டைப் செஞ்ச வேண்டும் இதே ஒரு தளத்தில் இருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களை முடக்க *@xyz.com என டைப் செய்யவும்.
6. Click on Next Step, select the action you’d like to take on the blocked emails. You may select the option Delete it so that the blocked email is moved to trash. To unblock the email, all you need to do is just delete the filter that you’ve created.

  • For Yahoo

1. Login to your account
2. At the top-right corner, click on Options
3. A drop down menu appears, now click on More options
4. In the left panel select the option Filters and click on create or edit filters
5. Now click on Add
6. In the next screen, give a name to your filter and in the From header field enter the email address that you want to block.
உதாரணமாக tamil10000@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் tamil10000@gmail.com என டைப் செஞ்ச வேண்டும் இதே ஒரு தளத்தில் இருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களை முடக்க *@xyz.com என டைப் செய்யவும்.
7. Select the option Move the message to: Trash and click on Save Change

  • For Hotmail
1. Login to your account
2. At the top-right corner, click on Options
3. A drop down menu appears, now click on More options
4. Click on Safe and blocked senders link under Junk e-mail
5. Now click on Blocked senders
6. Type in the email address that you want to block under blocked e-mail address or domain field.
உதாரணமாக tamil10000@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் tamil10000@gmail.com என டைப் செஞ்ச வேண்டும் இதே ஒரு தளத்தில் இருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களை முடக்க*@xyz.com என டைப் செய்யவும்.
source: tamilcomputertipstricks.blogspot.com