Monday, August 15, 2011

பேஸ்புக் நிறுவனரின் கணக்கு களவு போன பரிதாபம்!




பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக்கர்கள் களவாடப்பட்டுள்ளது.


ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியை போட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1,800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர்.தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது. பேஸ்புக்கில் புகுந்து ஹேக் செய்வது சகஜமாகி வருகிறது. ஏராளமான 
பிரபலங்களின் பக்கங்கள்தான் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றன. சமீபத்தில் கூட பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தனர்.
அதில் சார்கோசி மறு தேர்தலை விரும்பவில்லை என்று எழுதியிருந்தனர். 

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்து, பேஸ் புக்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

Related Posts:

0 comments:

Post a Comment