தட்டச்சு செய்வதற்கு பதிலாக நம்முடைய கைகளால் அழகான, தெளிவான கையெழுத்தால் எழுதும் உரையை கணினியில் பயன்படுத்தபடும் ஒரு எழுத்துரு (font) ஆக மாற்றிக் கொள்ளமுடியும் . இந்த செயல் இணையத்தில் ஒரு நேரடி சேவையாக www.fontcapture.com என்ற தளத்திலிருந்து நமக்கு கிடைக்கின்றது.
இதற்காக தனியான எந்தவொரு மென்பொருளையும் நம்முடைய கணினியில் நிறுவிடத்தேவையில்லை. நம்மிடம் கணினியுடன் அச்சுப்பொறி (printer), வருடி(Scanner) இணைய இணைப்பு ஆகியவை மட்டும் இருந்தால் போதும்.
இதற்காக தனியான எந்தவொரு மென்பொருளையும் நம்முடைய கணினியில் நிறுவிடத்தேவையில்லை. நம்மிடம் கணினியுடன் அச்சுப்பொறி (printer), வருடி(Scanner) இணைய இணைப்பு ஆகியவை மட்டும் இருந்தால் போதும்.
முதலில் www.fontcapture.com எனும் இணைய தளத்திற்கு செல்க. அங்கு இந்ததளத்தில் இருக்கும் எழுத்துருமாதிர படிம (font template)கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க இது ஒரு கையடக்க ஆவனகோப்பாக (PDF ) இருக்கும். அதனை நம்முடைய கணினியுடன் இணைத்துள்ள அச்சுப்பொறியின் மூலம் அச்சிட்டுக் கொள்க பின்னர் அச்சிடபட்ட எழுத்துருமாதிர படிமத்தில் (font template) கோரியவாறு நம்முடைய கையெழுத்தால் அதில் எழுதி நிரப்பிக் கொள்க. அதன்பின்னர் அந்த எழுத்துருமாதிர படிமத்தை (font template) ஒரு உருவ கோப்பாக(image file) வருடி (scanner)மூலம் வருடசெய்து இந்த உருவ கோப்பினை(image file) இதே இணைய தளத்திற்குச் சென்று பதிவேற்றம்(upload) செய்து விடுக. உடன் நம்முடைய கையெழுத்தால் எழுதி நிரப்பபட்ட எழுத்துருமாதிர படிம (font template) கோப்பானது ஒரு சில நிமிடங்களில் நம்முடைய கையெழுத்தைக் கொண்ட ஒரு புதிய எழுத்துரு கோப்பாக(font file) உருமாறிவிடும் அதனை நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம்(download) செய்து நம்முடைய கணினியின் எழுத்துரு மடிப்பகத்தில்(font folder) நிறுவிக்கொள்க
0 comments:
Post a Comment