Friday, August 26, 2011

SKYPE இல் குரலை மாற்றி பேச


InternetSkype Voice Changer, Skype அழைப்புகளின் போது எமது குரலை மாற்றிக்கொள்ள உதவும் ஒரு Utility மென்பொருளாகும். C# மொழியில் நிரலாக்கப்பட்ட ஒரு திறந்த மென்பொருளாக  Source Code உடன் கிடைக்கிறது. சும்மா ஒரு Fun க்கு தான் வேறு எதற்கு?
இங்கே தரவிறக்கலாம் Download Skype Voice Changer
Download செய்தபின்னர் இடது மூலையில் காணப்படும் Skype Icon இனை அழுத்தி skype உடன் இணைக்கலாம். Skype இல் இணைப்பதற்கான அனுமதியை Skype இடைமுகப்பில் வழங்கிய பின்னர் விரும்பிய effect களை தெரிவு செய்து பின்னர் அழைப்புகளை ஏற்படுத்தி மறுமுனையில் இருப்பவரை பயமுறுத்தலாம்.. 

FACEBOOK: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க!


வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.


ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script  பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்.


இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..



LINK 
http://userstyles.org/styles/browse/facebook.com

"GOOGLE CHROME": பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி!



நம்மில் பலரும், சக பதிவர்களின் இடுகைகளை Google Reader மூலமாக படித்து வருகிறோம். ஆனால் அவ்வப்பொழுது Google Reader தளத்திற்கு சென்று புதிய நண்பர்களின் இடுகைகள் ஏதெனும் உள்ளதா? என பார்த்து வருவது கொஞ்சம் அலுப்பு தரக்கூடிய விஷயமாக உள்ளது. இந்த பணியை எளிதாக்க.. Google Chrome உலாவிக்கான பயனுள்ள நீட்சி Google நிறுவனத்தின் Google Reader Notifier. 





(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.) இந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, மேலே உள்ள டூல்பாரில் இந்த நீட்சிக்கான ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.


க்ரோம் உலாவியில் நீங்கள் ஒரு முறை உங்கள் Google பயனர் கணக்கில் நுழைந்து விட்டால், உடனடியாக நீங்கள் படிக்காமல் Google Reader இல் உள்ள இடுகைகளின் எண்ணிக்கை இந்த ஐகானில் அப்டேட் செய்யப்படும். அத்தோடு இந்த ஐகானை க்ளிக் செய்தால், Google Reader இல் Un Read இடுகைகளின் லிங்குகள் Popup ஆகும்.


இந்த நீட்சியின் Options பகுதிக்கு சென்று கீழே உள்ள வசதியை நமது தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.


Monday, August 15, 2011

பேஸ்புக் நிறுவனரின் கணக்கு களவு போன பரிதாபம்!




பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக்கர்கள் களவாடப்பட்டுள்ளது.


ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியை போட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1,800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர்.தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது. பேஸ்புக்கில் புகுந்து ஹேக் செய்வது சகஜமாகி வருகிறது. ஏராளமான 
பிரபலங்களின் பக்கங்கள்தான் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றன. சமீபத்தில் கூட பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தனர்.
அதில் சார்கோசி மறு தேர்தலை விரும்பவில்லை என்று எழுதியிருந்தனர். 

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்து, பேஸ் புக்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

Sunday, August 14, 2011

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?




பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள்.
பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.
மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ்  இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.
Posted By Ahamed Safnaj [Web Master]