Sunday, November 13, 2016

கணினியில் உள்ள இணைய இணைப்பை Wi-Fi மூலம் Share பண்னுவது எப்படி?

உங்கள் கணினியில் இருக்கும் எந்தவொரு இணைய இணைப்பையும் அதாவது  Wi-fi, LAN, Cable Modem, Dial-up இப்படி எதுவாக இருந்தாலும், இந்த மென்பொருளைக்கொண்டு ,உங்கள் Net Connection ஐ இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Wi-fi மூலம் மற்றவா்களுடன்  பகிர்ந்து கொள்ள முடியும்.




Network Name (SSID) என்பதற்கு விரும்பிய பெயரையும், Password என்பதற்கு விரும்பிய Password இணையும், Shared Connection என்பதற்கு உங்கள் கணியில், நீங்கள் பாவிக்கும் இணைய இணைப்பையும் தொிவு செய்து விட்டு, Start Virtual Router Plus என்ற பட்டனை க்ளிக் செய்தால் சரி.உங்கள் இணை இணைப்பை இனி Wi-Fi மூலம் எந்தவொறு சாதனத்தின் மூலமும் உங்கள் Password இனை கொண்டு  பெற்றுக்கொள்ள முடியும்.


Thursday, November 10, 2016

Web Browser இல் விளம்பர தொல்லையா?

அன்றாடம் இணையத்தில் உலாவும் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில வேலைகளால் எமது இணைய உலாவியில் அடிக்கடி விளம்பரங்களும் வளமைக்கு மாறான தேடல் பொறியும் இருப்பதை நாம் காண முடியும்.

இவற்றை அகற்றுவதற்கு பலரும் பல முறைகளில் முயற்சி செய்து இருப்பீர்கள். அப்போது தான் நாம் நமது கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருட்களை அகற்றுவது பற்றியும் இணைய உலாவியில் உள்ள addon களை அகற்றுவது பற்றியும் சிந்திப்போம் . இருந்தாலும் பெரும்பாலான முயற்சிகள் இதற்க்கு பயன் அளிப்பதாக தெரியவில்லை. சில முறை சாத்தியப்பட்டாலும் மறுகணமே மீண்டும் இந்த தொல்லை ஆரம்பிக்கும். 


Adware Removal Tool எனும் மென்பொருள் இதற்கு ஒரு அருமையான மருந்து. இதன் மூலம் நாம் அறியாத பல விளம்பர சேவைகளும் , ஆங்காங்கே மிளிரும் பல பொய்யான Addon களும் அகற்றப்படுகின்றன.நீங்கள் இதனை உங்கள கணினியில் நிறுவ வேண்டிய அவசியமும் இல்லை , நேரடியாகவே பயன்படுத்த முடியும். இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.


பிடித்து இருந்தால் Share செய்யவும்.

Tuesday, October 4, 2016

64 Bit - 32 Bit என்றால் என்ன? ஒரு விரிவான பார்வை.

கணினியின் மூளையாக தொழிற்படும் ஒரு வன்பொருள் சாதனமே Central Processing Unit என அறியப்படும் CPU ஆகும். நாம் உள்ளிடும் தரவுகளை தகவல்களாக மாற்றும் பிரதான தொழிற்பாடு இந்த CPU எனும் சாதனத்தாலே இடம்பெறுகின்றது என்றாலும் இதற்கு RAM எனும் நினைவகத்தின் பங்கும் உண்டு.

Processor பிரதானமாக இரண்டு வகைப் படுகின்றது. அதில் ஒன்று 32 Bit எனவும் மற்றையது 64 Bit எனவும் இனங்காணப் படுகின்றது.


Bit என்பது Binary Digit என்பதன் சுருக்கமாகும் இதன் மூலமாகவே கணினியில் தரவுகள் சேமிக்கப்படுகின்றன. ஒரு பிட் என்பது 0 அல்லது 1 எனும் பெருமானங்களாக எடுக்கலாம். 1 மற்றும் 0 களால் ஆன எழுமாறான ஒரு சேர்மானமே (100100100111) Binary code எனப்படுகிறது.

Bit எனும் இந்த பெறுமானத்தை கொண்டே CPU கணித்தல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றது. 32 Bit வகையில் அமைந்த Processor மூலம் பூச்சியத்தில் இருந்து4,294,967,295 வரையான சேர்மானங்களை உருவாக்கலாம், அதே போல் 64 Bit வகையில் அமைந்த Processor மூலம் பூச்சியத்தில் இருந்து 18,446,744,073,709,551,615 வரையிலான வெவ்வேறு சேர்மானங்களை உருவாக்க முடியும். இதன் மூலம் 64 Bit வகையில் அமைந்த Processor கள் மூலம் அதிக அளவிலான தரவுகளை கையாள முடியும் என்பது தெளிவாகின்றது.

அத்துடன் கணினியில் Data Bus எனும் ஒரு விடயம் அமைந்துள்ளது இதன் தொழிற்பாடு RAM நினைவகத்தை Processor உட்பட கணினியின் இன்னும் பல பாகங்களுடன் இணைப்பதாகும். எனவே இங்கு 32 Bit ஐ அடிப்படையாகக் கொண்ட கணினியில் Data Bus இன் அளவு 32 Bit ஆக இருக்கும் அதேவேளை 64 Bit ஐ அடிப்படையாகக் கொண்ட கணினியில் Data Bus இன் அளவு அதன் இரு மடங்காக இருக்கும். எனவே 64 Bit கணினிகளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் கையாளப்படும் தரவுகளின் அளவு அதிகமாக இருப்பதால் அவைகள் 32 Bit கணினியிலும் பார்க்க வேகமாக இயங்கும்.

64 Bit Processor இன் கட்டமைப்பானது 32 Bit Processor இலும் பார்க்க பல மடங்கு மேம்பட்டதாக அமைந்திருக்கும் இதனால் 32 Bit Processor ஐ விட 64 Bit Processor அதிக செயற்திறன் வாய்ந்ததாக இருக்கும் எனினும் 64 Bit Processor களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய மென்பொருள்கள் நிறுவப்படும் போதே இதன் பூரண பயனை பெற்றுக்கொள்ள முடியும்.

தற்பொழுது உருவாக்கப்படக்கூடிய இயங்குதளங்கள் உட்பட ஏராளமான மென்பொருள்கள் 64 Bit இற்கு ஆதரவு அளிக்கக்கூடிய வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. 

இதன் காரணமாகவே இன்று இயங்குதளங்கள் உட்பட இன்னும் ஏராளமான மென்பொருள்களின் பதிப்புக்கள் 32 Bit, 64 Bit என வெவ்வேறாக கிடைக்கின்றன. பொதுவாக 64 Bit இயங்குதளம் நிறுவப்பட்ட கணனியில் 32 Bit பதிப்பை கொண்ட மென்பொருள்களை நிறுவ முடியும் என்றாலும் 32 Bit கணினியில் 64 Bit பதிப்பை கொண்ட மென்பொருள்களை நிறுவ முடியாது.

எனவே மென்பொருள்களை தரவிறக்கும் போது உங்கள் கணினி 64 Bit இற்கு ஆதரவு அளிக்கும் எனின் 64 Bit பதிப்பில் அமைந்த மென்பொருள்களை தரவிறக்கி பயன்படுத்துங்கள் இதன் மூலம் உச்ச பயனை பெற முடியும்.

அத்துடன் 32 Bit வகையில் அமைந்த கணினிகள் அதிகப்படியாக 4 GB RAM நினைவகத்தையே ஆதரவு அளிக்கும். என்றாலும் 64 Bit வகையில் அமைந்த கணினிகள் அவ்வாறில்லை 4 GB ஐ விட அதிக நினைவகத்தை கொண்ட RAM இற்கும் ஆதரவு அளிக்கும்.

Saturday, September 3, 2016

Windows, Mac கணினிகளுக்கான Whatsapp மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவையை தற்பொழுது அனைத்து சாதனங்கள் மூலமும் பயன்படுத்த முடிந்தாலும் முன்னர் வெளிவந்த சில மொபைல் சாதனங்களுக்கான ஆதரவை இவ்வாண்டு இறுதியில் நிறுத்த இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு அதற்கான மென்பொருள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.


கீலுள்ள சுட்டி மூலம் இதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.


உங்களின் சுயவிபர படத்தை மாற்றிக்கொள்வது உட்பட ஸ்மார்ட்போன் மூலம் பெறமுடியுமான அனைத்து வசதிகளையும் இந்த மென்பொருள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் வாட்ஸ்அப் மூலம் புதிய செய்திகள் பெறப்படும் போது அவற்றை நோட்டிபிகேஷன் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கான வசதியும் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது.

இதனை தரவிறக்கி நிறுவிய பின்னர் தோன்றும் QR குறியீட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும் இனி உங்கள் வாட்ஸ்அப்கணக்கை கணினி மூலம் நிர்வகிக்கலாம்.

வாட்ஸ்அப் தரவிறக்க (விண்டோஸ் 60 MB, மேக் 51 MB)

Tuesday, March 22, 2016

iPhone SE உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருந்த iPhone SE தொடர்பில் நீண்ட நாட்களாக இருந்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் iPhone SE எனும் Smart Phone நேற்று ஆப்பிள் நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இது iPhone 5S இன் தோற்றத்தை கொண்டிருந்தாலும் அதனை விட வேகத்திலும் கிராபிக்ஸ் திறனிலும் கூடியதாகும்.



iPhone SE ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள Apple A9 ப்ராசசரானது iPhone 5S ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள Apple A7 ப்ராசசரை விட இரு மடங்கு வேகமாக இயங்கக்கூடிய அதே நேரம் கிராபிக்ஸ் திறனுக்காக iPhone SE ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள PowerVR GT7600 எனும் GPU (graphic processing unit) ஆனது ஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள PowerVR G6430 GPU விட மூன்று மடங்கு வேகத்திலும் இயங்கக் கூடியதாகும்.


மேலும் ஐபோன் எஸ். ஸ்மார்ட் போனில் 4K திறனில் வீடியோ கோப்புக்களை பதிவு செய்துகொள்ளும் வகையில் 12 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது ஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனில் 8 மெகாபிக்சல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவைகள் 4 அங்குல திரையை கொண்டுள்ள இது ஆப்பிள் நிறுவனத்தின் iOS 9.3 இயங்குதளத்தை கொண்டு இயங்குகின்றது.

4 ஜி வலையமைப்பு மற்றும் வை-பை வலையமைப்பை வேகமாக பயன்படுத்துவதற்கான வன்பொருளை கொண்டுள்ள இவைகள் லைவ் போட்டோ பிடிப்பதற்கான வசதியையும் கொண்டுள்ளது. எனினும் ஐபோன் 6-எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் போன்ற ஸ்மார்ட் போன்களில் அறிமுகப்படுத்தப்பட்ட 3டி டச் வசதி இதில் வழங்கப்படவில்லை.

16 GB மற்றும் 64 GB ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் விலைகள் முறையே கிட்டத்தட்ட 26,500 மற்றும் 33,250 இந்திய ரூபாய்கள் ஆகும். இது மே மாத இறுதிக்குள் 100 நாடுகளில் விற்பனைக்கு விடப்படவுள்ளது.

Ahamed Safnaj
Web Admin





Wednesday, February 24, 2016

Samsung Galaxy S7 மற்றும் S7 Edge ஆகிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதிகமானவர்களால் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் ஆகிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Samsung Galaxy S7 Edge

சாம்சங் அறிமுகப்படுத்தும் சிறப்பு ஸ்மார்ட் போன்களான இவைகள் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகமானவர்களால் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் ஆகிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சாம்சங் அறிமுகப்படுத்தும் சிறப்பு ஸ்மார்ட் போன்களான இவைகள் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட் போனை ஒத்த தோற்றத்தை கொண்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட் போனில் மைக்ரோ எஸ்.டி கார்ட் பயன்படுத்தும் வசதியும் நீர் மற்றும் தூசு உட்புகுதலை தடுப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும் இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் போன்ற ஸ்மார்ட் போன்களில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


உலோகத்திலான சுற்றுப்புறத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விரு ஸ்மார்ட் போன்களும் கூகுளின் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

தொடர்ச்சியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் திரை மூலம் நேரம் திகதி மற்றும் ஏனைய விபரங்களையும் எந்நேரத்திலும் கண்காணிக்கலாம்.

கேலக்ஸி எஸ் 7

சாம்சங் கேலக்ஸி எஸ் 7 ஸ்மார்ட் போன் 5.1 அங்குல  QHD AMOLED திரையை கொண்டுள்ள அதேவேளை சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் ஸ்மார்ட் போன் இருபக்கங்களிலும் சற்று வளைந்த 5.5 அங்குல  QHD AMOLED திரையை கொண்டுள்ளது.

இவ்விரண்டு ஸ்மார்ட் போன்களும் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 ப்ராசசரை கொண்டுள்ளதுடன் 4 ஜிபி RAM நினைவகத்தை கொண்டுள்ளன.

32 ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இவற்றின் நினைவகத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு மைக்ரோ எஸ்.டி கார்ட் பயன்படுத்தி அதிகரித்துக் கொள்ளலாம்.

நீண்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தும் வகையில் வலிமையான பேட்டரிகளை இவைகள் கொண்டுள்ளதுடன் கம்பியற்ற முறையில் மின்னேற்றிக் கொள்வதற்கான (Wireless Charging) வசதியும் இவற்றில் வழங்கப்பட்டுள்ளது.




இவ்விரண்டு ஸ்மார்ட் போன்களிலும் 12 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய பிரதான கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4K திறன் கொண்ட வீடியோ கோப்புக்களை பதிவு செய்ய முடியும். மேலும் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை பிடிப்பதற்கான DSLR தொழில்நுட்பம் இதில் தரப்பட்டுள்ளதுடன், குறைந்த வெளிச்சத்தில் ஐபோன் 6 ஸ்மார்ட் போன்களை விடவும் சிறந்த தெளிவுடைய புகைப்படங்களை புகைப்படங்களை இதன் மூலம் பிடிக்க முடியும் என சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது கருப்பு, வெள்ளை, வெள்ளி மற்றும் பொன் நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விற்பனை எதிர்வரும் மார்ச் 11 முதல் ஆரம்பமாகும்.
 6 ஸ்மார்ட் போனை ஒத்த தோற்றத்தை கொண்டுள்ளன.


சாம்சங் கேலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட் போனில் மைக்ரோ எஸ்.டி கார்ட் பயன்படுத்தும் வசதியும் நீர் மற்றும் தூசு உட்புகுதலை தடுப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும் இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் போன்ற ஸ்மார்ட் போன்களில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


உலோகத்திலான சுற்றுப்புறத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விரு ஸ்மார்ட் போன்களும் கூகுளின் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

தொடர்ச்சியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் திரை மூலம் நேரம் திகதி மற்றும் ஏனைய விபரங்களையும் எந்நேரத்திலும் கண்காணிக்கலாம்.

கேலக்ஸி எஸ் 7

சாம்சங் கேலக்ஸி எஸ் 7 ஸ்மார்ட் போன் 5.1 அங்குல  QHD AMOLED திரையை கொண்டுள்ள அதேவேளை சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் ஸ்மார்ட் போன் இருபக்கங்களிலும் சற்று வளைந்த 5.5 அங்குல  QHD AMOLED திரையை கொண்டுள்ளது.

இவ்விரண்டு ஸ்மார்ட் போன்களும் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 ப்ராசசரை கொண்டுள்ளதுடன் 4 ஜிபி RAM நினைவகத்தை கொண்டுள்ளன.

32 ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இவற்றின் நினைவகத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு மைக்ரோ எஸ்.டி கார்ட் பயன்படுத்தி அதிகரித்துக் கொள்ளலாம்.

நீண்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தும் வகையில் வலிமையான பேட்டரிகளை இவைகள் கொண்டுள்ளதுடன் கம்பியற்ற முறையில் மின்னேற்றிக் கொள்வதற்கான (Wireless Charging) வசதியும் இவற்றில் வழங்கப்பட்டுள்ளது.




இவ்விரண்டு ஸ்மார்ட் போன்களிலும் 12 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய பிரதான கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4K திறன் கொண்ட வீடியோ கோப்புக்களை பதிவு செய்ய முடியும். மேலும் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை பிடிப்பதற்கான DSLR தொழில்நுட்பம் இதில் தரப்பட்டுள்ளதுடன், குறைந்த வெளிச்சத்தில் ஐபோன் 6 ஸ்மார்ட் போன்களை விடவும் சிறந்த தெளிவுடைய புகைப்படங்களை புகைப்படங்களை இதன் மூலம் பிடிக்க முடியும் என சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது கருப்பு, வெள்ளை, வெள்ளி மற்றும் பொன் நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விற்பனை எதிர்வரும் மார்ச் 11 முதல் ஆரம்பமாகும்.

Saturday, February 6, 2016

உங்களது Phone-ஐ Recover செய்ய முடியாதவாறு File-களை Delete செய்வது எப்படி?

இன்றைய பதிவில் நீங்கள் Delete செய்த  எந்த ஒரு File-ஐயும் Recover செய்ய முடியாத படி செய்வது எப்படி என்று பார்ப்போம். சாதரணமாக நாங்கள் எமது போனை, Pen Drive அல்லது ஏதேனும் External Storage Device-களை மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் போது அதிலே இருக்கும் அனைத்து தரவுகளையும் Delete செய்த பின்னரே விற்பனை செய்வோம்.

ஆனால் Delete செய்த அனைத்து தகவல்களையும் மிக இலகுவாக Recover செய்து கொள்ள  முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

Delete செய்த File-களை மிக இலகுவாக Professional Data Recovery Tool-களை பயன்படுத்தி Recover செய்து கொள்ள முடியும்.

உங்களிடம் இருந்து உங்கள் போனையோ அல்லது Pen Drive-ஐயோ வாங்கியவர் , உங்கள் தரவுகளை Recover செய்யும் பட்சத்தில் அதை தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறான பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் எவ்வாறு உங்கள் தனிப்பட்ட File-களை Recover செய்ய முடியாதபடி Delete செய்வது என்று காட்டுகிறேன்.



இதனால் உங்கள் தனிப்பட்ட File-கள் பாதுகாக்கபடுவதோடு நீங்கள் எதுவித பயமும் இன்றி உங்களுடைய போனையோ அல்லது Pen Drive-ஐயோ இன்னொருவருக்கு விற்பனை செய்ய முடியும்.

Recover செய்ய முடியாதவாறு ஒரு  File-ஐ எவ்வாறு Delete செய்வது?

உங்களுடைய கோப்புகளை எந்த விதமான Recovery Tool-ஐ பயன்படுத்தியும் Recover செய்ய முடியாத வண்ணம் Delete செய்ய File Shredder எனும் மென்பொருள் ஒன்று உதவுகிறது.

இங்கே கிளிக் செய்து File Shredder மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

தரவிறக்கிய மென்பொருளை உங்கள் கணனியில் Install செய்யுங்கள்.
இப்போது உங்கள் Memory Card, Pen Drive அல்லது Phone, எதிலிருந்து உங்கள் கோப்புக்களை Recover செய்ய முடியாதவாறு Delete செய்ய நினைக்கிறீர்களோ அந்த Device-ஐ உங்கள் கணணியும் Connect செய்யுங்கள்.
இப்போது நீங்கள் Delete செய்ய நினைக்கும் File-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள்.

கீழே காட்டபட்டிருப்பது போல் File Shredder எனும் ஒரு Option தோன்றும்.


அங்கே Secure Delete File எனும் Option-ஐ தெரிவு செய்து உங்கள் கோப்புக்களை Delete செய்யுங்கள்.

அவ்வளவு தான். இனி எந்தவிதமான File Recovery Tool-ஐ பயன்படுத்தியும் உங்களது Delete செய்யப்பட்ட கோப்புக்களை மீட்டெடுக்க முடியாது.

இவ்வாறு உங்கள் அனைத்து கோப்புக்களையும் Delete செய்த பின்னர், குறிப்பிட்ட Storage Device-ஐ Format செய்யுங்கள். சாதரணமான முறையில் Format செய்யாமல், கீழே குறிப்பிட்டிருப்பது போல், Quick Format எனும் Option-ஐ Un-tick செய்யுங்கள்.


பின்னர் Start எனும் Option-ஐ Click செய்து Format செய்யுங்கள்.

இவ்வாறு Format செய்வதால், உங்கள் External Storage Device-ல் தங்கி இருக்கும் அனைத்து System File-களும் முழுமையாக Delete செய்யப்படும்.

இப்போது எதுவித பயமும் இன்றி குறிப்பிட்ட Storage Device-ஐ இன்னொருவருக்கு கொடுக்கவோ அல்லது விற்பனை  செய்யவோ முடியும்.