Tuesday, March 22, 2016

iPhone SE உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருந்த iPhone SE தொடர்பில் நீண்ட நாட்களாக இருந்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் iPhone SE எனும் Smart Phone நேற்று ஆப்பிள் நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இது iPhone 5S இன் தோற்றத்தை கொண்டிருந்தாலும் அதனை விட வேகத்திலும் கிராபிக்ஸ் திறனிலும் கூடியதாகும்.



iPhone SE ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள Apple A9 ப்ராசசரானது iPhone 5S ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள Apple A7 ப்ராசசரை விட இரு மடங்கு வேகமாக இயங்கக்கூடிய அதே நேரம் கிராபிக்ஸ் திறனுக்காக iPhone SE ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள PowerVR GT7600 எனும் GPU (graphic processing unit) ஆனது ஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள PowerVR G6430 GPU விட மூன்று மடங்கு வேகத்திலும் இயங்கக் கூடியதாகும்.


மேலும் ஐபோன் எஸ். ஸ்மார்ட் போனில் 4K திறனில் வீடியோ கோப்புக்களை பதிவு செய்துகொள்ளும் வகையில் 12 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது ஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனில் 8 மெகாபிக்சல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவைகள் 4 அங்குல திரையை கொண்டுள்ள இது ஆப்பிள் நிறுவனத்தின் iOS 9.3 இயங்குதளத்தை கொண்டு இயங்குகின்றது.

4 ஜி வலையமைப்பு மற்றும் வை-பை வலையமைப்பை வேகமாக பயன்படுத்துவதற்கான வன்பொருளை கொண்டுள்ள இவைகள் லைவ் போட்டோ பிடிப்பதற்கான வசதியையும் கொண்டுள்ளது. எனினும் ஐபோன் 6-எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் போன்ற ஸ்மார்ட் போன்களில் அறிமுகப்படுத்தப்பட்ட 3டி டச் வசதி இதில் வழங்கப்படவில்லை.

16 GB மற்றும் 64 GB ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் விலைகள் முறையே கிட்டத்தட்ட 26,500 மற்றும் 33,250 இந்திய ரூபாய்கள் ஆகும். இது மே மாத இறுதிக்குள் 100 நாடுகளில் விற்பனைக்கு விடப்படவுள்ளது.

Ahamed Safnaj
Web Admin