Saturday, September 3, 2016

Windows, Mac கணினிகளுக்கான Whatsapp மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவையை தற்பொழுது அனைத்து சாதனங்கள் மூலமும் பயன்படுத்த முடிந்தாலும் முன்னர் வெளிவந்த சில மொபைல் சாதனங்களுக்கான ஆதரவை இவ்வாண்டு இறுதியில் நிறுத்த இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு அதற்கான மென்பொருள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.


கீலுள்ள சுட்டி மூலம் இதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.


உங்களின் சுயவிபர படத்தை மாற்றிக்கொள்வது உட்பட ஸ்மார்ட்போன் மூலம் பெறமுடியுமான அனைத்து வசதிகளையும் இந்த மென்பொருள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் வாட்ஸ்அப் மூலம் புதிய செய்திகள் பெறப்படும் போது அவற்றை நோட்டிபிகேஷன் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கான வசதியும் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது.

இதனை தரவிறக்கி நிறுவிய பின்னர் தோன்றும் QR குறியீட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும் இனி உங்கள் வாட்ஸ்அப்கணக்கை கணினி மூலம் நிர்வகிக்கலாம்.

வாட்ஸ்அப் தரவிறக்க (விண்டோஸ் 60 MB, மேக் 51 MB)