Saturday, October 8, 2011

அனைவருக்கும் டெப்லட் கணனி 35 அமெரிக்க டொலரில்

து 'ஆகாஸ்' என இந்த டெப்லட் கணனிகள் பெயரிடப்பட்டுள்ளன. 

இவை இந்திய தொழிநுட்ப இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Technology, IITs) மற்றும் பிரித்தானிய 'டேட்டா விண்ட்' நிறுவனமும் இணைந்தே இக் கணனியை உருவாக்கியுள்ளன. 

மேற்படி டெப்லட் கூகுளின் அண்ட்ரோய்ட் இயங்குதளத்தினைக் கொண்டியங்குகின்றதுடன், எல்.சீ.டி திரையையும் கொண்டுள்ளது. 


இதன் முதல் 100,000 கணனிகளும் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.

சில மாதங்களுக்கு பின்னர் அனைவரும் விலைகொடுத்து வாங்கும் வண்ணம் விற்பனைக்கு வரவுள்ளது 

இதன் போது 3 ஜி தொழிநுட்பத்தில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படவுள்ளதுடன் 60 அமெரிக்க டொலர்கள் வரை விலையிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.. 

வறியவர்களுக்கு கணனி அறிவைப் பெற்றுக் கொடுக்கவும், இணைய உலகில் இணைவதற்கு வாய்ப்பளிக்கவுமே இதனை உருவாக்கியுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் கல்வி அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். 

இத்தகைய மலிவு விலைகொண்ட டெப்லட் கணனியை உருவாக்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக இந்தியா கடந்த வருடம் அறிவித்திருந்தது. 

எனினும் உற்பத்திச் செலவு மற்றும் சரியான நிறுவனத்தினை தெரிவு செய்வது என்பவற்றில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக இக் கணனி வெளியீட்டில் காலதாமதம் ஏற்பட்டது. 

இத்திட்டம் கைவிடப்படுமெனக் கருதப்பட்டு வந்த நிலையில் அது தற்போது சாத்தியமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Thursday, October 6, 2011

கொள்வனவாளர்களை ஏமாற்றிய அப்பிள்: ஐ போன் 4 எஸ் ஈர்ப்பில்லை

இவ்வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியாகக் கருதப்பட்ட அப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 4எஸ் (I phone 4S) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. 

இக் கையடக்கத் தொலைபேசி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டமைக்கு 2 முக்கிய காரணங்களைக் குறிப்பிடலாம். 






சுமார் 1 வருடத்திற்கும் அதிகமான இடைவெளியின் பின்னர் வெளியாகும் ஐ போன் அதன் கையடக்கத்தொலைபேசியென்பதுடன், ஸ்டீவ் ஜொப்ஸ் அப்பிள் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகிய பின்னர் டிம் குக் அப்பதவியை ஏற்றவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தியென்பதுமாகும். 


எனினும் இவ் எதிர்பார்ப்புகள் இரண்டும் வெற்றியளித்ததா என்பது சற்று சந்தேகத்துக்குரிய கேள்வியாக மாறியுள்ளது. 

ஆம், பல எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகிய ஐ போன் 4 எஸ்அப்பிளின் ஐ போன் கையடக்கத் தொலைபேசி வரிசையின் அடுத்த வெளியீடாகும். 

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் குறிப்பாக புதிய தோற்றத்துடன் முன்னரை விட பெரிய திரையைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. 

எனினும் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கும் வகையில் ஐ போன் 4 வின் தோற்றத்தினையே ஐ போன் 4 எஸ் கொண்டுள்ளது. 

எனினும் அப்பிளின் புதிய ஐ. ஓ .எஸ் 5 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது. 

மேலும் 200 இற்கும் அதிகமான புது வசதிகளை இது கொண்டதாக அப்பிள் குறிப்பிடுகின்றது. 

அதில் குறிப்பிடக்கூடியவையாக 

1.டுவல் கோர் எ 5 சிப் ( ஐ பேட் 2) முன்னையவற்றை விட இருமடங்கு வேகமான செயற்பாடு மற்றும் 7 மடங்கு வேகமான கிரப்பிக்ஸ். 

2. 8 மெகா பிக்ஸல் கெமரா, 1080 HD வீடியோ பதிவு செய்யக்கூடியது. 

3. சைரி (siri) எனப்படும் எங்களது குரலை புரிந்து கொண்டு அதற்கேற்ப அழைப்புகளை மேற்கொள்ளும்,குறுந்தகவல்களை அனுப்ப, மற்றைய தகவல்களை வழங்கும் வசதி. 

இவற்றில் அப்பிள் பெரிதும் நம்பியிருப்பது சைரி (siri) எனப்படும் வசதியினையே ஆகும். இத்தகைய வசதி ஏற்கனவே அண்ட்ரோயிட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள போதிலும் அப்பிள் இத்தொழிநுட்பத்தை நன்கு மேம்படுத்தியுள்ளது. 

அதாவது நமக்கு தேவையான விடயங்களை ஞாபகப்படுத்தும், கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வசதியுள்ளது. 

பலவசதிகள் பற்றி அப்பிள் கூறிய போதிலும் அதன் தோற்றம் கொள்வனவாளர்களைப் பெரிதும் ஈர்க்கவில்லையென்றே தோன்றுகின்றது. 

மேலும் அப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையானது முதலீட்டாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் புதிய உற்பத்தி மீது நாட்டம் கொள்ளவில்லையென்பதனைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இங்கு மேலும் எதிர்பார்க்கப்பட்ட விடயம் என்னவெனில் ஐ போன் 4 எஸ் இனை அறிமுகப்படுத்திய நபராவார். ஆம் ஸ்டீவ் ஜொப்ஸ் வெளியேறியதன் பின்னர் அப்பதவியை பெற்ற டிம் குக் ஐ போன் 4 எஸ் இனை இம்முறை அறிமுகப்படுத்தினார்.

பொதுவாக ஸ்டீவ் ஜொப்ஸ் அறிமுகப்படுத்தியபோது அப்பிளின் உற்பத்திகளுக்கு அதற்கென தனி எதிர்பார்ப்பு மற்றும் தனியானதொரு கவர்ச்சி காணப்பட்டது. அதற்கு அவரது சந்தைப்படுத்தல் நுணுக்கங்கள் பேச்சுத் திறன் மற்றும் தொழிநுட்ப அறிவாற்றல் என்பவையே காரணமாயின. 

எனினும் இம்முறை டிம்குக் மற்றும் அவருடன் இணைந்து ஐ போனை அறிமுகப்படுத்திய அப்பிள் உற்பத்திகளின் உலகளாவிய சந்தைப்படுத்தலுக்கான சிரேஸ்ட உபதலைவர் பிலிப் ஸ்கிலர் ஆகியோர் அந்தளவு தாக்கத்தினை ஏற்படுத்தினரா என்பது சந்தேகமே. 

அண்ட்ரோயிட் இயங்குதளத்தின் ஆதிக்கம் சந்தையில் அதிகரித்துவரும் நிலையில் அப்பிள் இத்தகைய உற்பத்தியொன்றினை வெளியிட்டுள்ளது. 

எது எவ்வாறெனினும் பொருளொன்றின் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிப்பது நுகர்வோரே. எனவே அப்பிள் ஐ போன் 4 எஸ் வரவேற்பைப் பெறுகின்றதா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 


மீண்டும் சந்திப்போம்....

Tuesday, September 13, 2011

YOUTUBE: வீடியோக்களை வேண்டிய வடிவில் தரவிறக்க அட்டகாசமான கருவி

பலரும் YouTube வீடியோக்களை தங்களது கணினியில் தரவிறக்கி பார்ப்பதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இப்படி YouTube வீடியோக்களை தரவிறக்க பல மென்பொருட்கள் மற்றும் வலைப்பக்கங்கள் இருந்தாலும்,YouTube Downloader HD என்ற இலவச மென்பொருள் கருவி, நல்ல தரமானதாகவும், விரைவாக தரவிறக்கம் செய்யும்படியாகவும், பிற வீடியோ வடிவிற்கு மாற்றும் வசதியோடும் உள்ளது. 

(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இதனை நிறுவும் பொழுது இறுதி திரையில் தேவையான வசதியை மட்டும் தேர்வு செய்து Finish பொத்தானை அழுத்துங்கள். 


இனி இந்த கருவியில் தேவையான தரத்தை (FLV video 240p / Medium quality/HQ 360p/HD 1080p) Download என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பிறகு, YouTube தளத்தில் உங்களுக்கு தேவையான வீடியோ உள்ள பக்கத்திற்கு செல்லுங்கள்.


அந்த பக்கத்தின் URL ஐ அட்ரஸ் பாரிலிருந்து காப்பி செய்து கொண்டு, இந்த YouTube Downloder HD மென்பொருள் கருவியில் உள்ள Video URL என்பதற்கு நேராக பேஸ்ட் செய்து விடுங்கள்.


உங்கள் வன்தட்டில் எந்த ஃபோல்டரில் சேமிக்க வேண்டும் என்பதை Save to பகுதிக்கு நேராக கொடுத்து Download பொத்தானை அழுத்துங்கள்.


ஒருவேளை நீங்கள் தேர்வு செய்திருந்த quality யில் அந்த குறிப்பிட்ட வீடியோ இல்லையெனில், அதற்கடுத்த குறைந்த quality யில் முயற்சி செய்யட்டுமா? என்ற வசனப்பெட்டி தோன்றும், இதில் Yes பொத்தானை அழுத்துங்கள்.


அட்டகாசமான வேகத்தில் வீடியோ தரவிறக்கப்படுவதை பார்க்கலாம்.


இதன் வேகமும் தரமும், பிற கருவிகளை விட அருமையாக உள்ளது.



பிற AVI, MP4 போன்ற வடிவங்களில் மாற்றி சேமிக்கவும் இதில் வசதி உள்ளது.

YouTube Downloader HD free download

VLC மீடியா ப்ளேயருக்கான அட்டகாசமான ஸ்கின்கள்

VLC Media Player பெரும்பாலான கணினி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஆச்சர்ய படவைக்கும் வசதிகள், மற்றும் இது ஒரு சுதந்திர இலவச மென்பொருள் என்பதும் இதற்கு காரணமாக இருக்கிறது. இந்த ப்ளேயரை மேலும் அழகு படுத்த உங்களுக்காக அட்டகாசமான ஸ்கின்கள் (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). தரவிறக்கம் செய்யும் ஸ்கின்களை எப்படி VLC யில் பதிவது என்பதை பார்க்கலாம். 
உங்கள் கணினியில் VLC ப்ளேயரின் Shortcut ஐ வலது க்ளிக் செய்து Properties க்ளிக் செய்து அங்கு shortcut டேபில் சென்று, VLC உங்கள் வன்தட்டில் எங்கு பதியப்பட்டுள்ளது என்று பார்த்துக் கொள்ளுங்கள். வழக்கமாக C:\Program Files\VideoLan\VLC என்று இருக்கும். 

 
My Computer -ல் அந்து குறிப்பிட்ட லொகேஷனுக்கு சென்று அதிலுள்ள Skins ஃபோல்டருக்கு செல்லுங்கள்.

 
இந்த ஃபோல்டருக்குள்தான் நீங்கள் தரவிறக்கம் செய்யும் ஸ்கின்களை சேமித்து வைக்க வேண்டும். 

இப்படி சேமித்துக் கொண்ட பிறகு, VLC ப்ளேயரை திறந்து கொண்டு Tools மெனுவில் Preferences என்பதை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் Interface Settings திரையில் Use Custom Skin ரேடியோ பட்டனை க்ளிக் செய்து பிறகு Save பட்டனை க்ளிக் செய்து கொள்ளுங்கள். ஒரு முறை VLC ப்ளேயரை மூடி பின் திறக்கவும்.


இப்பொழுது Default skin உடன் VLC ப்ளேயர் திறக்கும்.  இந்த திரையில் வலது க்ளிக் செய்து Interface சென்று Select skin க்ளிக் செய்து, தேவையான Skin ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். 

அவ்வளவுதான்.. இதோ இந்த முறையில் உங்கள் VLC ப்ளேயரை அழகுபடுத்துங்கள். 

Friday, September 2, 2011

FREE DOWNLOAD AVAST ANTIVIRUS v6.0 2011

Computer viruses always disturb our system.So, we have to always make protection for the PC. That is by installing antivirus.have lots of antivirus, free and premium. Surely, the premium ones is better. By the way, if you are looking for free ones, we suggest you to try Avast. Avast is free antivirus that has proven its ability to protect our PC from viruses.
Free Avast 6.0 DownloadAlthough Avast Antivirus is free, it able to scan, clean or delete newest viruses. Now, Avast was upgraded for may times. The latest version is Avast 6.0. This new version comes with several improvements and new features.  Surely, it to make this antivirus be the best Antivirus.
Now, y0u can get Avast 6.0 for free. download  it on the links below.

Friday, August 26, 2011

SKYPE இல் குரலை மாற்றி பேச


InternetSkype Voice Changer, Skype அழைப்புகளின் போது எமது குரலை மாற்றிக்கொள்ள உதவும் ஒரு Utility மென்பொருளாகும். C# மொழியில் நிரலாக்கப்பட்ட ஒரு திறந்த மென்பொருளாக  Source Code உடன் கிடைக்கிறது. சும்மா ஒரு Fun க்கு தான் வேறு எதற்கு?
இங்கே தரவிறக்கலாம் Download Skype Voice Changer
Download செய்தபின்னர் இடது மூலையில் காணப்படும் Skype Icon இனை அழுத்தி skype உடன் இணைக்கலாம். Skype இல் இணைப்பதற்கான அனுமதியை Skype இடைமுகப்பில் வழங்கிய பின்னர் விரும்பிய effect களை தெரிவு செய்து பின்னர் அழைப்புகளை ஏற்படுத்தி மறுமுனையில் இருப்பவரை பயமுறுத்தலாம்.. 

FACEBOOK: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க!


வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.


ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script  பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்.


இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..



LINK 
http://userstyles.org/styles/browse/facebook.com

"GOOGLE CHROME": பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி!



நம்மில் பலரும், சக பதிவர்களின் இடுகைகளை Google Reader மூலமாக படித்து வருகிறோம். ஆனால் அவ்வப்பொழுது Google Reader தளத்திற்கு சென்று புதிய நண்பர்களின் இடுகைகள் ஏதெனும் உள்ளதா? என பார்த்து வருவது கொஞ்சம் அலுப்பு தரக்கூடிய விஷயமாக உள்ளது. இந்த பணியை எளிதாக்க.. Google Chrome உலாவிக்கான பயனுள்ள நீட்சி Google நிறுவனத்தின் Google Reader Notifier. 





(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.) இந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, மேலே உள்ள டூல்பாரில் இந்த நீட்சிக்கான ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.


க்ரோம் உலாவியில் நீங்கள் ஒரு முறை உங்கள் Google பயனர் கணக்கில் நுழைந்து விட்டால், உடனடியாக நீங்கள் படிக்காமல் Google Reader இல் உள்ள இடுகைகளின் எண்ணிக்கை இந்த ஐகானில் அப்டேட் செய்யப்படும். அத்தோடு இந்த ஐகானை க்ளிக் செய்தால், Google Reader இல் Un Read இடுகைகளின் லிங்குகள் Popup ஆகும்.


இந்த நீட்சியின் Options பகுதிக்கு சென்று கீழே உள்ள வசதியை நமது தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.


Monday, August 15, 2011

பேஸ்புக் நிறுவனரின் கணக்கு களவு போன பரிதாபம்!




பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக்கர்கள் களவாடப்பட்டுள்ளது.


ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியை போட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1,800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர்.தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது. பேஸ்புக்கில் புகுந்து ஹேக் செய்வது சகஜமாகி வருகிறது. ஏராளமான 
பிரபலங்களின் பக்கங்கள்தான் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றன. சமீபத்தில் கூட பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தனர்.
அதில் சார்கோசி மறு தேர்தலை விரும்பவில்லை என்று எழுதியிருந்தனர். 

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்து, பேஸ் புக்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

Sunday, August 14, 2011

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?




பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள்.
பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.
மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ்  இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.
Posted By Ahamed Safnaj [Web Master]