Tuesday, November 17, 2015

Android இலிருந்து iOS க்கு மாறலாம்

புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்பிள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் ஐபோனுக்கு மாறிக் கொள்ள வகை செய்திடும் செயலி ஒன்றை Move to iOS என்ற பெயரில் தந்துள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம், வயர் இணைப்பு இல்லாமலேயே, பழைய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து, புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றிக் கொள்ளலாம்.




Contacts, messages, photos, videos, mail, calendars , wallpapers and DRM-free music மற்றும் books ஆகியவற்றையும் மாற்றிக் கொள்ளலாம். இந்த செயலியை இயக்கினால், உங்களுடைய தற்போதைய ஆண்ட்ராய்ட் செயலிகளையும், ஐபோன் செயலிகளையும் ஒப்பீடு செய்கிறது. இலவச செயலிகள் அனைத்தும் தாமாகத் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. iOS 9 வெளீயீட்டில் இந்த செய்தி வந்துள்ளது. இந்த வருட பிற்பகுதியில் Move to iOS செயலி மற்றும் iOS 9 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


Wednesday, September 9, 2015

Webcamera-வை CCTV Camera வாக மாற்ற‍லாம்

  
வெப்கேமராவை சிசிடிவி கேமராவாக எளிதில் மாற்ற‍லாம் , முற்றிலும் இலவசமாக . . ..
சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற் கு ஆயிரக்கணக்கில் செலவா கும் என நினைத்து வைக்காம லே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங் கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள் ள cameraவை எளிதில் cctv கேமராவாக
எளிதல் மாற்றிவிட லாம்.
இதை செய்வதற்கு yawcam என்ற மென்பொருளை நாம் பயன்படுத்தி க் கொள்ளலாம். இதில் மகிழ்ச்சி யான செய்தி என்னவெ னில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் தான். எனவே எந்த செலவும் நமக்கு இல்லை.
இதில் பல்வேறு வசதிகள் உள்ளது. உதாரணமாக motion detection என்ற வசதிஉள்ளது. எதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவு ஏற்ப ட்டால் உடனே நமக்கு email மூலம் alert செய்யும். நாம் கேமரா வை கண்காணிக்காது இருக்கும்போது வீட்டில் யாராவது புகுந் தால் அதை நமக்குதெரியப்படுத்த இ ந்த வசதி உதவியாக இருக்கும்.
இன்டர்நெட்மூலம் எங்கிருந்துவே ண்டுமானாலும் உங்கள்வீட்டை அல் லது கடையை கண்காணித்துகொள் ளலாம். இதில் கூடுதல் ஒரு வதி என்னவெனில் சிசிடிவி கேமராவை க்கப்பட்டு கண்காணிக்கப்படுின்றது என யாருக்கும்தெரியாது. எதோ கம்யுட்டர் என்றுதான் அனை வரும் நினைத்துக் கொள்ளவார்கள். இதனால் வீட்டில் கடையில் நடக்கும் உண்மை நிலையை யாருக்கும் தெரியாமல் நாம் கண் காணிக்கலாம்.
இந்த மென்பொருளில் பின் வரும் வசதிகள் இடம் பெற்று ள்ளது.
Yawcam features:
.: Video streaming
.: Image snapshots
.: Built-in webserver
.: Motion detection
.: Ftp-upload
.: Text and image overlays
.: Password protection
.: Online announcements for communities
.: Scheduler for online time
.: Time lapse movies
.: Run as a Windows service
.: Multi languages
பின் வரும் இணையத்திற்கு சென் று இந்த மென்பொருளை இலவச மாக Download செய்து கொள்ள லா்ம:

Wednesday, February 18, 2015

கணனியில் தோன்றும் Beep ஒலி

கணனியில் ஒலிக்கும் பீப் ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.


1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்
4 முறை பீப் சத்தம்:
டைமரில் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.
5 முறை பீப் சத்தம்:
ப்ராசசரில் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.
6 முறை பீப் சத்தம்:
கீ போர்டு, கீ போர்டு கண்ட்ரோலில் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.
7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.
8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.
11 முறை பீப் சத்தம்:
கேச் மெம்மரி சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.
1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
மெமரி தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணனி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.
தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
கணனி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.
1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.
1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்
3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.
இப்போது கணனியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே உங்கள் கணனியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.