Tuesday, September 13, 2011

YOUTUBE: வீடியோக்களை வேண்டிய வடிவில் தரவிறக்க அட்டகாசமான கருவி

பலரும் YouTube வீடியோக்களை தங்களது கணினியில் தரவிறக்கி பார்ப்பதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இப்படி YouTube வீடியோக்களை தரவிறக்க பல மென்பொருட்கள் மற்றும் வலைப்பக்கங்கள் இருந்தாலும்,YouTube Downloader HD என்ற இலவச மென்பொருள் கருவி, நல்ல தரமானதாகவும், விரைவாக தரவிறக்கம் செய்யும்படியாகவும், பிற வீடியோ வடிவிற்கு மாற்றும் வசதியோடும் உள்ளது. 

(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இதனை நிறுவும் பொழுது இறுதி திரையில் தேவையான வசதியை மட்டும் தேர்வு செய்து Finish பொத்தானை அழுத்துங்கள். 


இனி இந்த கருவியில் தேவையான தரத்தை (FLV video 240p / Medium quality/HQ 360p/HD 1080p) Download என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பிறகு, YouTube தளத்தில் உங்களுக்கு தேவையான வீடியோ உள்ள பக்கத்திற்கு செல்லுங்கள்.


அந்த பக்கத்தின் URL ஐ அட்ரஸ் பாரிலிருந்து காப்பி செய்து கொண்டு, இந்த YouTube Downloder HD மென்பொருள் கருவியில் உள்ள Video URL என்பதற்கு நேராக பேஸ்ட் செய்து விடுங்கள்.


உங்கள் வன்தட்டில் எந்த ஃபோல்டரில் சேமிக்க வேண்டும் என்பதை Save to பகுதிக்கு நேராக கொடுத்து Download பொத்தானை அழுத்துங்கள்.


ஒருவேளை நீங்கள் தேர்வு செய்திருந்த quality யில் அந்த குறிப்பிட்ட வீடியோ இல்லையெனில், அதற்கடுத்த குறைந்த quality யில் முயற்சி செய்யட்டுமா? என்ற வசனப்பெட்டி தோன்றும், இதில் Yes பொத்தானை அழுத்துங்கள்.


அட்டகாசமான வேகத்தில் வீடியோ தரவிறக்கப்படுவதை பார்க்கலாம்.


இதன் வேகமும் தரமும், பிற கருவிகளை விட அருமையாக உள்ளது.



பிற AVI, MP4 போன்ற வடிவங்களில் மாற்றி சேமிக்கவும் இதில் வசதி உள்ளது.

YouTube Downloader HD free download

VLC மீடியா ப்ளேயருக்கான அட்டகாசமான ஸ்கின்கள்

VLC Media Player பெரும்பாலான கணினி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஆச்சர்ய படவைக்கும் வசதிகள், மற்றும் இது ஒரு சுதந்திர இலவச மென்பொருள் என்பதும் இதற்கு காரணமாக இருக்கிறது. இந்த ப்ளேயரை மேலும் அழகு படுத்த உங்களுக்காக அட்டகாசமான ஸ்கின்கள் (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). தரவிறக்கம் செய்யும் ஸ்கின்களை எப்படி VLC யில் பதிவது என்பதை பார்க்கலாம். 
உங்கள் கணினியில் VLC ப்ளேயரின் Shortcut ஐ வலது க்ளிக் செய்து Properties க்ளிக் செய்து அங்கு shortcut டேபில் சென்று, VLC உங்கள் வன்தட்டில் எங்கு பதியப்பட்டுள்ளது என்று பார்த்துக் கொள்ளுங்கள். வழக்கமாக C:\Program Files\VideoLan\VLC என்று இருக்கும். 

 
My Computer -ல் அந்து குறிப்பிட்ட லொகேஷனுக்கு சென்று அதிலுள்ள Skins ஃபோல்டருக்கு செல்லுங்கள்.

 
இந்த ஃபோல்டருக்குள்தான் நீங்கள் தரவிறக்கம் செய்யும் ஸ்கின்களை சேமித்து வைக்க வேண்டும். 

இப்படி சேமித்துக் கொண்ட பிறகு, VLC ப்ளேயரை திறந்து கொண்டு Tools மெனுவில் Preferences என்பதை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் Interface Settings திரையில் Use Custom Skin ரேடியோ பட்டனை க்ளிக் செய்து பிறகு Save பட்டனை க்ளிக் செய்து கொள்ளுங்கள். ஒரு முறை VLC ப்ளேயரை மூடி பின் திறக்கவும்.


இப்பொழுது Default skin உடன் VLC ப்ளேயர் திறக்கும்.  இந்த திரையில் வலது க்ளிக் செய்து Interface சென்று Select skin க்ளிக் செய்து, தேவையான Skin ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். 

அவ்வளவுதான்.. இதோ இந்த முறையில் உங்கள் VLC ப்ளேயரை அழகுபடுத்துங்கள். 

Friday, September 2, 2011

FREE DOWNLOAD AVAST ANTIVIRUS v6.0 2011

Computer viruses always disturb our system.So, we have to always make protection for the PC. That is by installing antivirus.have lots of antivirus, free and premium. Surely, the premium ones is better. By the way, if you are looking for free ones, we suggest you to try Avast. Avast is free antivirus that has proven its ability to protect our PC from viruses.
Free Avast 6.0 DownloadAlthough Avast Antivirus is free, it able to scan, clean or delete newest viruses. Now, Avast was upgraded for may times. The latest version is Avast 6.0. This new version comes with several improvements and new features.  Surely, it to make this antivirus be the best Antivirus.
Now, y0u can get Avast 6.0 for free. download  it on the links below.