Wednesday, February 27, 2013

உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம்!

இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.' என்று வரும் , அதில் உறுப்பினராக வேண்டுமெனில், இமெயில் முகவரி அளித்து , இன்னப்பிற தகவல்களை அளித்து , அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். 




இதற்குள் நாம் தேடிய விசயமே மறந்துவிடும். சில சமயம் அறியாத இணையத்தளங்களில் நமது மெயில் முகவரியை அளித்தால், அது ஸ்பாம்மர்களின் கையில் சிக்கி, நாம் வெற்றிலை பாக்கு வைத்து ஸ்பாம்மர்களை அழைத்தது போல் ஆகிவிடும். இது போன்ற சிக்கல்களை தீர்க்க இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் நீங்கள் http://www.bugmenot.com/ இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் உறுப்பினர் ஆகா வேண்டிய இணையத்தள முகவரியை அளித்தால், அவர்கள் இலவச ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு அளிப்பார்கள் . உதாரணமாக நாம்www.tamilwire.com முகவரிக்கு சென்று புதிய படங்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் அதற்க்குUsername , Password அளித்தால், தான் படங்களை டவுன்லோட் பண்ண முடியும் ஆனால் நாம் நான் கூறிய இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் படங்களை டவுன்லோட் பண்ண இருக்கும் www.tamilwire.com என்ற இத இணையத்தளத்தின் முகவரியை கொடுத்தால் அவர்கள் நமக்கு இலவச Username மற்றும் Password கிடைக்கும் அதை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் . இதனால் அவசத்தேவையின் போது இதனை பயன்படுத்தி நாம் ஆபத்து இல்லாமல் இணையத்தளங்களை பயன்படுத்தலாம் நேரத்தையும்

மிச்சப்படுத்தலாம்.



Tuesday, February 5, 2013

மாறும் Internet முகவரி அமைப்பு


இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது. இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் 
இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும்.

இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் Internet Society-யினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால் இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதன் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது.  நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.

IPv6 அமைப்பில் 340 undecillion முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில் 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் network நிறுவனங்கள் கையாளும்.